ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியது சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. தமிழகம் முழுவதும் இருந்து சவுக்கு சங்கர் மீது பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு விசாரணையை போலீசார் துவங்கியுள்ளனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சவுக்கு சங்கரை கைது செய்தனர். இந்நிலையில் திருச்சி, சேலம், ஊட்டி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது புகார் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அந்த பகுதிகளிலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு இடையே கோவை, சென்னை ஆகிய பகுதிகளில் முத்துராமலிங்கத் தேவரை அவதூறாக பேசியதாகவும், அவர் மீது புகார் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த புகாரின் பேரிலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் தேனியில் கஞ்சா வளர்க்கும் அவர் மீது பதிவானது. இப்படி மொத்தமாக தமிழகம் முழுவதும் அவர் மீது பதினைந்து வழக்குகள் பதிவு ஆனது. இதன் காரணமாக ஒவ்வொரு பகுதிக்கும் அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். எனவே சவுக்கு சங்கர் மீது தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சவுக்கு சங்கர் மீதான வழக்கு கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் முதல், முதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே அவர் மீது திண்டுக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை தாம்பரம், சேலம், சென்னை, நாகப்பட்டினம், நீலகிரி நெல்லை, கன்னியாகுமரி உட்பட 15 பகுதிகளில் பதிவான வழக்குகள் கோவைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதை அடுத்து வழக்குகளின் பழைய முதல் தகவல் அறிக்கையைப் எப்.ஐ.ஆர் மறுப் பதிவு செய்து புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 15 போலீஸ் நிலையங்கள் உள்ள உதவி ஆய்வாளர்கள் கோவைக்கு வர வழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை கோவையில் தங்கி இருந்து பணியாற்றுவார்கள் தற்பொழுது இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.