இனி சட்ட மசோதாவிற்கு காலம் தாழ்த்த முடியாது
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்திய அரசியலிலே ஜனநாயகத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி.ஆளுநருக்கு கால நிர்ணயம் மட்டுமே இருந்தது, ஒரு மாத கால அவகாசம் மட்டுமே உள்ளது.
ஆளுநர் நினைத்தால் அவர் இதுவரைக்கும் ராஜினாமா செய்து இருக்கலாம். மத்திய அரசு நினைத்தால் அவரை திரும்ப அழைத்து இருக்கலாம். இனி அவர் பதவியில் இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை ஏனென்றால் இனி சட்ட மசோதாவிற்கு காலம் தாழ்த்த முடியாது.
முதலமைச்சர் முடிவு செய்வார்
திமுகவின் மூத்த அமைச்சர்கள் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு எந்த கருத்தையும் பேசுவதில்லை.பேசிக்கொண்டிருக்கும்போது நாக்கு தவறி சில வார்த்தைகளை கூறிவிடுகின்றனர்.அதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மூத்த அமைச்சர்கள் குறித்து கருத்து கூற எனக்கு உரிமை இல்லை. பொன்முடி அமைச்சர் பதவியில் இருப்பதும், அவரை நீக்குவது குறித்தும் முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார்” என தெரிவித்தார்.