அரசியல்

பாஜக பேனரில் இடம்பெற்ற நயினார் புகைப்படம்.. தலைவர் குறித்து சூசகமாக அறிவிப்பு?

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட உள்ளதை பேனரின் மூலம் சூசகமாக பாஜக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக பேனரில் இடம்பெற்ற நயினார் புகைப்படம்.. தலைவர் குறித்து சூசகமாக அறிவிப்பு?
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கு தங்களது கட்சியின் உள்கட்டமைப்பு பணியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு மாற்றாக வேறொருவரை நியமிக்க பாஜக மேலிடம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியன.

யார் அடுத்த பாஜகவின் மாநிலத் தலைவர் ? என்கிற ரேஸில் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பெயர்கள் அடிபட்டது. தற்போது அமித்ஷா தமிழம் வருகைத்தந்துள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரிரு நாளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பாஜக மாநில தலைவருக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைப்பெற்றது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ள நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரங்கில் வைக்கப்பட்டுள்ள பேனரில் முக்கிய மாற்றம் இடம்பெற்றுள்ளது. அதாவது, அந்த பேனரில் நயினார் நாகேந்திரன் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அவரின் புகைப்படத்திற்கு அடுத்ததாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புகைப்படம் உள்ளது.

இந்த பேனரை பார்த்த நெட்டிசன்கள் நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக நியமிப்பதை இந்த பேனரின் மூலம் பாஜக சூசகமாக தெரிவித்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.