அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் கலந்துக்கொண்ட ஒரு பொதுக்கூட்ட நிகழ்வில், அவர் பேசிய ஆபாசமான பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சமீபத்தில் பேசிய பேச்சு மிகவும் ஆபாசமாக இருந்ததாக கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுகூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி விலைமாதுவை குறிப்பிட்டு சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அவர் பேசிய ஆபாசமான பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
திமுக அமைச்சர் பொன்முடி மகளிர் இலவச பேருந்து பயணம் உட்பட, பல்வேறு நேரங்களில் சர்ச்சைக்குறிய வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கட்சியின் மேடையில், அவ்வப்போது குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
“அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும், இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி., அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.