தமிழ்நாடு

தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழை...எங்கெல்லாம் தெரியுமா?

இடி மின்னலுடன் கூடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது

 தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழை...எங்கெல்லாம் தெரியுமா?
கொட்டித்தீர்த்த கனமழை

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் ஒரு வாரமாக கடும்வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் வெயில் தாக்கத்தால் அவதிப்பட்டனர்.
இந்தநிலையில் குறிப்பிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருத்திருந்தது.அதேபோல் முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு சுமார் 8.30 மணி முதல் திடீரென்று லேசாக குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் இடி, மின்னல், பலத்த சூறைக்காற்றுடன் சுமார் இரண்டு மணிநேரம் இடைவிடாமல் கனமழை பெய்தது.

இதனால் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்தன. கடைகளில் வைக்கப்பட விளம்பர போர்டுகள் பறந்தது. சாலையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் பேரிக்காடுகள் சாலையில் நடுவே சாய்ந்தது.

மின்சாரம் துண்டிப்பு

மேலும், பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்ததால் மின்சாரம் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை ஏற்பட்டது. தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் திடீரென பெய்த கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.