துரைமுருகன் சர்ச்சை பேச்சு
கோவில்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பாஜக கூட்டணி குறித்து பேசுகையில், ஊனத்தை குறிக்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் "பாஜக அதிமுகவை பிடித்து நொண்டி, கூன், குருடான கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.
தமிழகத்தில் இரண்டே கட்சிகள் தான் ஒன்று திமுக, இன்னொன்று அதிமுக மற்றது எல்லாம் கட்சியே இல்லை" என பேசியுள்ளார். இது மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தை குறிப்பிட்டு அரசியல் நையாண்டி செய்ததாகவும், இதற்க்காக அமைச்சர் துரைமுருகனை கண்டிக்கும் வகையிலும், உடனடியாக மாற்றுத்திறனாளிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட வலியுறுத்தியும் கடந்த 9ம் தேதி காட்பாடி அடுத்த சில்க் மில் பேருந்து நிறுத்தத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சுமார் 50 மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இனி இதுபோன்ற நிகழ்வு நடக்காது
இதேபோல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் அமைச்சர் துரைமுருகனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் மாற்றுத்திறாளிகள் குறித்தான சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் துரைமுருகன், “மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். இனி இதுபோன்ற நிகழ்வு நடக்காது. மாற்றுத்திறனாளிகளை பழைய பெயரை கொண்டே உச்சரித்துவிட்டேன். எனது பேச்சு குறித்து முதலமைச்சர் தனது கவனத்திற்கு கொண்டுவந்தபோது அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்” என தெரிவித்துள்ளார்.