K U M U D A M   N E W S

தமிழ்நாடு

மீண்டும் விமானத்தின் மீது அடிக்கப்பட்ட லேசர் லைட்.. போலீசார் தீவிர விசாரணை

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானத்தின் மீது இரண்டாவது முறையாக பச்சை நிற லேசர் லைட் அடிக்கப்பட்டகால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையினருக்கு டிஜிபி வெளியிட்ட முக்கிய உத்தரவு.. காரணம் என்ன?

சீருடையுடன் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டாம் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

முடிவுக்கு வரும் மீன்பிடி தடைகாலம்.. படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரி

மீன்பிடி தடைகாலம் நிறைவடைய உள்ள நிலையில், மீன்பிடி படகுகளை மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் இன்று ஆய்வு செய்தார்.

போலீசாரிடம் ஆபாசமாக பேசிய விசிக நிர்வாகிகள்.. வைரல் வீடியோ

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் போலீசாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய அதிமுக பிரமுகர்.. போலீசார் வலைவீச்சு!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய அதிமுக வட்டச் செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

யானை வழித்தடத்தை பாதுகாக்க கோரிய வழக்கு.. அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவை, வனக்கோட்ட பகுதிகளில் யானை வழித் தடங்களை பாதுகாக்க வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கில் அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகளுடன் வெங்காயம் நடவு செய்த கோவை கலெக்டர்!

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் விவசாயிகளுடன் இணைந்து வெங்காயம் நடவு செய்தது அப்பகுதியில் பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

விவசாயி சடலத்தை பீகாருக்கு மாற்றி அனுப்பிய அரசு மருத்துவமனை- கொந்தளிப்பில் உறவினர்கள்

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அலட்சியத்தால் தமிழகத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் சடலம் பீகாருக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராடி வருகின்றனர்.

சிக்கன் குழம்பில் பல்லி.. உணவகத்தில் நாடகமாடிய 4 பேருக்கு போலீசார் வலை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கிவரும் உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் குழம்பில் பல்லி கிடந்ததாக நாடகமாடிய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை - டி.ஆர். பாலு

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மக்களுக்கும் விளக்கும் வகையில், ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை என திமுக பொருளாளரும், மக்களவைக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரியாணி சாப்பிடுவதில் சகோதரிகளிடையே தகராறு.. தங்கையின் விபரீத முடிவு!

பிரியாணி சாப்பிடுவதில் சகோதரிகள் இடையே ஏற்பட்ட தகராறில், தங்கை மொட்டை மாடியில் இருந்து குறித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் பரபரப்பு.. வீடு புகுந்து ரவுடி படுகொலை..!

சென்னை தண்டையார்பேட்டையில், வீட்டில் புகுந்து ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைத்து பாஜக சதி - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பா? மத்திய அரசின் முடிவை விமர்சித்த முதல்வர்

இந்தியாவின் முதல் சாதிவாரி டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திருமணம் ஆனதாக கூறி ஒரே வீட்டில் வாழ்ந்த ஆண்- பெண் தற்கொலை..!

ஓசூர் அருகே திருமணம் ஆனதாக கூறி ஒரே வீட்டில் வாழ்ந்த ஆண், பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டியின் உதட்டை கடித்த வாலிபர்.. பரபரப்பு சம்பவம்

ஜோலார்பேட்டை அருகே வாலிபர் ஒருவர் மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசிகவில் கோஷ்டி பூசல் மாவட்டச் செயலாளர் இடைநீக்கம்..!

கிருஷ்ணகிரி விசிகவில் கோஷ்டி பூசல் பூதாகரமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தலைவலிக்கு ஆளான தலைமை மாவட்டச் செயலாளரை இடைநீக்கம் வரை செய்துள்ளது.

அமைச்சர்களை ஓரங்கட்டிய மேயரின் கணவர்..! கட்டம் கட்டிய கட்சித் தலைமை..! பக்காவாக காய்நகர்த்தும் மூர்த்தி..!

உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை குடும்ப உறுப்பினர்கள் கையில் எடுத்து ஆடுவதாக பல மாதங்களாக புகார்கள் புகைந்துகொண்டிருந்தன. அதற்கு தீர்வுகாணும் வகையில் முதல்வர் கையில் சாட்டை எடுக்க, மதுரையில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

அமெரிக்க டாலரில் முதலீடு அதிக லாபம் என ஆசைவார்த்தை ரூ.6.88 லட்சம் மோசடி... 2 பேர் கைது

டாலரில் மூதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ. 6.88 லட்சம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாடலாசிரியருக்கு நேர்ந்த விபரீதம்.. தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளர்.. போலீசில் புகார்!

தேசிய விருது பெற்ற பாடலாசியர் பா.விஜய்க்கு பாடல் எழுதுவதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, ஒன்றரை வருடம் கழித்து, அவரை தரக்குறைவாக பேசி பணத்தை திருப்பி கேட்ட பெண் தயாரிப்பாளர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

கொரோனாவினால் தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை - அமைச்சர் சுப்ரமணியன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், இணை நோய் பாதிப்பு இருப்பதாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சீர்மிகு சிறுநீரக மருந்து திட்டத்தில் மக்கள் பயன் பெற நகரத்திலும் டயாலிசஸ் செய்யும் வசதியை கொண்டு செல்ல இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை... ஆசிரியர்களின் புதிய முயற்சி

உதகை அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்படும் என ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு பெற்றோர்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

ரவுடியிச தடுப்பு நடவடிக்கை.. 150 ரவுடிகளுக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்

ரவுடியிசத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு வழக்குகளில் கடந்தாண்டு கைதுசெய்யப்பட்ட 150 ரவுடிகளுக்கு 10 முதல் 12 ஆண்டுகள் வரை நீதிமன்றம் மூலம் சிறை தண்டனை பெற்று தந்ததாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை!

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் ஆகிய 2 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதி இல்லை என்ற பொதுநல மனுவின் மீது நீதிபதிகள் இடைக்கால உத்தரவிட்டுள்ளனர்.

வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3.61 லட்சம் மோசடி.. 2 பேர் கைது!

ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ரூ. 3.61 லட்சம் பெண்ணிடம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.