தி.மலையில் காலையில் சுட்டெரித்த வெயில்....மாலையில் கொட்டித்தீர்த்த கனமழை
திருவண்ணாமலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் அண்ணாமலையாரை தரிசிக்க கொட்டும் மழையிலும் நீண்ட காத்திருந்த பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
திருவண்ணாமலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் அண்ணாமலையாரை தரிசிக்க கொட்டும் மழையிலும் நீண்ட காத்திருந்த பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
2026 தேர்தல் கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என்பதே மதிமுகவின் நிலைப்பாடு என துரை வைகோ தெரிவித்தார்.
மதுரை மண்ணுக்குரிய முத்துராமலிங்க தேவரை அமித்ஷா நினைவு கூர்ந்து இருக்கிறார், நாம் அரசியலுக்காக அதை செய்யவில்லை என எல்.முருகன் பேட்டி
சென்னையில் இருந்து துபாயிக்கு 326 பேருடன் புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் திடீரென இயந்திரக்கோளாறு காரணமாக ஒடுபாதைக்கு செல்லும் முன் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
சித்தம் பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் பகுதியில் சேலம் சரக டிஐஜி உமா சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.
பக்ரீத் பண்டிகை அன்று தாய்க்கு பிரியாணி வாங்க கொண்டு வீடு திரும்பிய சிறுவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அமித்ஷாவை மதுரை ஆதீனம் வரவேற்றார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஆறுதல் அளித்தாலும் 'யார் அந்த சார்' என்ற கேள்வி இன்னமும் சோஷியல் மீடியாக்களில் எதிரொலித்துக்கொண்டே இருப்பது தி.மு.கவின் இமேஜை காலி செய்து வருகிறது. இந்த நிலையில், அமைச்சருடன் தொடர்பில் இருந்த வட்டச் செயலாளருக்கும் ஞானசேகரனுக்கு என்ன தொடர்பு, அமைச்சருக்கு அந்த வட்டச் செயலாளருக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொடுங்கையூரில் லிவிங் டூ கெதரில் இருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த பெண்ணை தூக்க மாத்திரை கொடுத்து மசாஜ் செய்யும் போது கழுத்தை நெறித்து, முன்னாள் காதலரான மருத்துவர் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
32 ஆண்டுகளுக்கு பிறகு அரசுப் பள்ளியில் 10 வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் வாட்ஸப் மூலம் ஒன்றிணைந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டை, காசாவில் வசிப்பவர்கள் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருபுறம் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலாலும், மறுபுறம் பசி பட்டினியாலும் காசா மக்கள் செத்து மடியும் நிலையில், அங்குள்ள உணவு தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது உலகளவில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீன்பிடிதுறைமுகம் பகுதியில் பயணியிடம் செல்போன் பறித்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், செல்போன் மீட்கப்பட்டு, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம் அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்
குருமூர்த்தி பேசியது தொடர்பாக ரகசியமாக காதில் கூறுகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல்
தமிழ் கடவுளுக்கு தமிழ்நாட்டில் தான் மாநாடு நடத்தப்பட வேண்டும் என செல்வப்பெருந்தகைக்கு மத்திய இணையமைச்சர் முருகன் பதிலடி
கோவைக்கு சென்றுள்ள இசைஞானி இளையராஜாவினை பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து உரையாடியுள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அடையாரில் உள்ள தனுஷ் ஹேர் டிரஸ்ஸர்ஸ், கடந்த 10 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்து வருகிறது. இதுத்தொடர்பான வீடியோ இன்ஸ்டாவில் தற்போது வைரலாகி வருகிறது.
தங்களுக்கான ஒரு ஒற்றுமைக்கான தளமாக முருகன் மாநாட்டை முருக பக்தர்கள் பார்க்கிறார்கள் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விளக்கம்
”ஞானசேகரனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. நான் அவரிடம் ஒருமுறை கூட போனில் பேசியதில்லை” என ஈரோட்டில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சூலூர் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், மர்ம நபர் CCTV கேமராவில் சிக்கியுள்ளார்.
குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் மத்திய அரசின் ’விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான்’ என்னும் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குருந்தங்குளம், மதகுடிப்பட்டி, ஏ.வேலங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கிய கொழுக்கட்டையில் உயிரிழந்த நிலையில் கரப்பான் பூச்சி இருந்துள்ள சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் CIBIL Report பார்த்து மட்டுமே பயிர் கடன் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (ஜூன் 6) முதல் தொடங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.