K U M U D A M   N E W S

தமிழ்நாடு

கரூரில் பள்ளி மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த அவலம் – தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடியை தற்காலிக பணியிடை  நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் உத்தரவிட்டார்.

சென்னை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்...இனி 2 ஆயிரம் ரூபாய் பாஸில் ஏசி பஸ்ஸிலும் போகலாம்

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 650 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அதில் குறிப்பாக 225 ஏசி பேருந்துகளும் வர உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அதிகளவில் பயன்பெற முடியும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

பஸ்ஸில் பெண்களிடம் சில்மிஷம்- இளைஞரை விரட்டி பிடித்து பொதுமக்கள் 

ராயப்பேட்டை அனைத்து மகளிர் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சையது அப்துல் ரஹ்மான் என்பவரை கைது செய்தனர்

திமுக அரசுக்கு அவமானமாக இருக்காதா?...தொடர் கொலைகள் – இபிஎஸ் கண்டனம்

தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்

கோவிலுக்கு வந்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - இளைஞரை கைது செய்த போலீஸ்

நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ராமநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குமரியில் பள்ளி தலைமை ஆசிரியரை கன்னத்தில் அறைந்த இளம்பெண் – வீடியோ வெளியாகி பரபரப்பு

இளம்பெண் கணவருடன் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதும், இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளதில் இரண்டு குழந்தைகள் தகப்பனாருடனும், ஒரு குழந்தை தாயாருடன் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சு- சீமான் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்கக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணாமலையார் கோயிலுக்கு தாமரை பூவுடன் வந்த பிரபல நடிகை...செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்

அண்ணாமலையாரை தரிசித்த அவர்கள் உண்ணாமலை அம்மன் சன்னதி கொடி மரத்தின் அருகில் முட்டி போட்டு கையில் தாமரை வைத்துக் கொண்டு நடிகை நமிதா மனமுருக சாமி தரிசனம் செய்தனர்

அதிசய வாழைத்தார்.. தாலி கட்டி,பொட்டு வச்சு செல்பி எடுக்க திரளும் பக்தர்கள்

நாகையில் வாழைப்பூ கீழிருந்து மேல்நோக்கி வளர்ந்து பார்ப்பதற்கு ஐந்து தலை நாகம் போல இருப்பதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அந்த வாழைத்தாரை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லுகின்றனர்.

உதகையில் 6 நாட்கள் மலர்க்கண்காட்சி.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127வது மலர் கண்காட்சி வரும் மே  மாதம் 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

சொத்து வரி கட்டாத கடைகளுக்கு குப்பைத் தொட்டியால் நெருக்கடி- மழுப்பும் மாநகராட்சி!

மதுரை மாநகராட்சியில் சொத்துவரியினை நீண்ட காலம் பாக்கி வைத்துள்ள வணிக கட்டிடங்கள், வீடுகள் முன்பு குப்பை தொட்டியினை வைத்து கட்டிட உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

5 மாதம் சம்பளம் இல்லை.. கண்டுகொள்ளாத அரசு.. போராட்டத்தில் இறங்கிய தொ.மு.ச!

கோவையில் தேசிய பஞ்சாலை கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு தொ.மு.ச தொழிற் சங்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பச்சை நிறமாக மாறிய வைகை அணை.. இதுதான் காரணமா?

வைகை அணையில் தண்ணீர் நீண்ட நாட்களாக தேங்கி இருப்பதாலும், கழிவு நீர் அதிகம் கலப்பதாலும் பச்சை நிறமாக மாறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1521 கோடி.. 1222 வழக்கு.. பதிவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்கு,  ஆயிரத்து 521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாகவும், இது சம்பந்தமான உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி ஆயிரத்து 222 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா வெற்றி செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குளிக்க சென்ற பெண்ணை துரத்திய கரடி- திணறும் வனத்துறை அதிகாரிகள்!

நாங்குநேரி அருகே குளிக்க சென்ற பெண்ணை கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கரடியை வனத்துறையினர் விரைந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

பல்கலைக்கழக கிளைகள் அமைக்கும் திட்டம்.. லண்டன் டைம்ஸ் உயர்கல்வி அமைப்புடன் ஒப்பந்தம்..!

அறிவுசார் நகரில் வெளிநாடுகளைச் சேர்ந்த சிறந்த பல்கலைக்கழகங்களின் கிளைகளை அமைப்பது தொடர்பாக, லண்டனைச் சேர்ந்த (Times Higher Education) என்ற அமைப்புடன் தொழில்துறை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ளாடு வளர்ப்பில் பிசினஸ் பண்ண ஆசையா? சூப்பர் வாய்ப்பு காத்திருக்கு..

வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சியில் ஈடுபட விரும்புவோர் வருகிற 21.03.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Gold price: இறங்க மனமில்லாத தங்கம்- மீண்டும் விலை உயர்வு!

சென்னையில் இன்று 22 கேரட் மதிப்புக்கொண்ட ஒரு சவரன் ரூ.66,000 ஆக விற்பனையாகிறது. நேற்றைய தினம் சவரன் ரூ.65,680 ஆக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் முற்றுகை.. பாஜகவினர் 1,250 பேர் மீது வழக்குப்பதிவு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1250  பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொடைரோட்டில் தம்பதிக்கு நேர்ந்த சோகம் - வீட்டில் இருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

அம்மையநாயக்கனூர் போலீசார் கணவன்-மனைவி இருவர் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சென்னையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்- நீதிமன்ற போட்ட அதிரடி உத்தரவு

பாதிக்கப்பட்ட  சிறுமியின் தாய் தரப்பில் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஒரே இரவில் 15 செம்மறி ஆடு உயிரிழப்பு- அச்சத்தில் கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பண்டசீமனூர் ஊராட்சியின் மந்த காளிக்கனூர் கிராமத்தில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செல்போனால் வந்த வினை...  இரண்டரை வயது சிறுவனுக்கு நேர்ந்த வேதனை

சிறுவன் விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை நவீன சிகிச்சை முறையில்  அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவ குழுவினரை பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.

சென்னையில் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி உயிரிழப்பு - காரணம் குறித்து போலீஸ் விசாரணை

மாணவி உயிரிழப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்