தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை!
Gold Rate
சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் அதிரடியாகப் பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது, நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் தங்கம் விலை டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.96,240-க்கு விற்பனையானது. தொடா்ந்து, நேற்று தங்கம் விலை மீண்டும் கிராமுக்கு ரூ.20 உயா்ந்து ரூ.12,050-க்கும், சவரனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.96,400-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை அசுர வேகத்தில் உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்று கிராமுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.12,250-க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயா்ந்து ரூ.98,000-க்கும் விற்பனையாகிறது. ஒரே நாளில் அதிரடியாகப் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை புதிய உச்சம்

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.8,000 உயா்ந்து ரூ.2.07 லட்சத்துக்கும் விற்பனையானது. தொடா்ந்து நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயா்ந்து ரூ.209-க்கும், ஒரு கிலோ ரூ.2,000 உயா்ந்து ரூ.2.09 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளி இன்று ஒரே நாளில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயா்ந்து ரூ.215-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.6,000 உயா்ந்து ரூ.2.15 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.