சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட பல இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டதுடன், ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
விக்ரம் ரவீந்திரன் வழக்கு முடித்து வைப்பு
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை ஏதும் நடத்தப்படவில்லை எனத் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தனர்.
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு ஒத்திவைப்பு
இதைத் தொடர்ந்து, ஆகாஷ் பாஸ்கரன் மீதான நடவடிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறை நடவடிக்கையை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணையை ஜனவரி மாதத்துக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

LIVE 24 X 7