தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை சரிவு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை சரிவு!
Gold Rate
சென்னையில் இன்று (டிசம்பர் 5) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 சரிவடைந்துள்ளது.

கடந்த நாட்களின் தங்கம் விலை நிலவரம்

நேற்று முன்தினம் (டிசம்பர் 3) ஆபரணத் தங்கம் கிராம் ரூ.12,060-க்கும், சவரன் ரூ.96,480-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.12,020-க்கும், சவரனுக்கு ரூ.320 சரிவடைந்து ரூ.96,160-க்கும் விற்கப்பட்டது.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில், இன்று (டிசம்பர் 5) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ₹12,000-க்கு விற்பனை ஆகிறது. சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் (டிசம்பர் 4 மற்றும் 5) தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.480 சரிவடைந்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் இன்று மேலும் குறைந்துள்ளது. நேற்று (டிசம்பர் 4) வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.200-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் ரூ.196-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.