'கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன'- முதல்வர் ஸ்டாலின்
விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (செப். 27, 2025) தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு கிராம் ரூ.10,640-க்கும், ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.3,360 உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூர் யாசின் நகரில் தாய் எல்லம்மாள் மற்றும் அவரது 13 வயது மகள் யாசிதா இருவரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி முடிந்து திரும்பிய மகன் கண்டு அளித்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் 3ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று (செப்டம்பர் 27, 2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மேற்கொள்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயின் நாமக்கல் வருகையையொட்டி, பால் விநியோகம் செய்யச் சென்ற பால் முகவர் சங்க நிர்வாகியைத் தடுத்து நிறுத்தி, மிரட்டிய போக்குவரத்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில், சென்னை டிடிகே சாலையில் உள்ள பிரபலமான அமராவதி உணவகம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்றும் இரண்டாவது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்சார வாகனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் ஊழியர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க, சென்னை ஐஐடி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
சென்னையில் நாய் கடித்த விவகாரத்தில், வாடிக்கையாளரின் உணவு டெலிவரியை வாசலில் வைத்த கல்லூரி மாணவர் ஃபைசலுக்கும், வங்கி ஊழியர் சண்முகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, செருப்பால் தாக்குதல் நடந்தது.
திருநெல்வேலி அருகே ஜெபத்திற்கு சென்றவர்களை வழிமறித்து, குங்குமம் பூசி, கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் மீது இந்திய நியாய சன்ஹிதா (INS) சட்டப் பிரிவுகளின் கீழ் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விஜயதசமி நாளில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.
கோவையில், தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதற்குக் கேள்வி கேட்ட தொழிலதிபர் பிரஜித்குமார் மீது, தனியார் வங்கி மேலாளர் ஆட்களை ஏவி நடத்திய கொலைவெறித் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப். 28 அன்று நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்வை 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 09:00 மணிக்கு மேல் தேர்வறைக்குள் நுழைய அனுமதியில்லை என TNPSC திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கோவையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பழக்கமான கிஷோர் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறை அலைக்கழிப்பதாகவும் கூறிப் பாதிக்கப்பட்ட பெண் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
சத்துணவுத் திட்டச் சீர்கேடுகளை மறைக்கவும், நிர்வாகத் தோல்விகளை மூடிமறைக்கவும் திமுக அரசு மக்கள் வரிப்பணத்தில் விளம்பர மோகத்துடன் பிரம்மாண்ட விழாக்களை நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராமநாதபுரம் அருகே திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு எஸ்.ஐ. மீது மர்ம நபர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட 5 முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.
வளசரவாக்கத்தில் செவிலியரை பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்த நபரை ஆட்டோ ஓட்டுநர் துரத்திப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.
வேலூரில் சுமார் அரை மணி நேரத்துக்கு பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி
சென்னையில் மாநகரப் பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு காரணமாக, பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மகளை கொன்று நாடகமாடி தந்தையை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல மாநிலங்கள் பின்பற்ற கூடிய அளவிற்கு திமுக தலைமையிலான கூட்டணி சாதனை படைக்கும் என திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்