K U M U D A M   N E W S

தமிழ்நாடு

கரூர் துயரம்: விஜய் காலதாமதமும், தவெக குளறுபடிகளுமே காரணம் - திருமுருகன் காந்தி கடும் குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

28 ஆண்டுகள் தாமதம்: பட்டா வழங்கக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை ஆதிதிராவிட மக்கள் முற்றுகை!

1996ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு 28 ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியதைக் கண்டித்து, காஞ்சிபுரம், வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடப் பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

என் வாழ்வில் வலி மிகுந்த தருணம்; அனைத்து உண்மைகளும் வெளியே வரும் - கரூர் சோகம் குறித்து விஜய் வேதனை!

கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

கரூர் விபத்து: தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை - ஆதவ் அர்ஜூனா மௌனம்!

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகம் குறித்து, தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம், "தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை" என்று மௌனம் காத்துள்ளார். இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் சோகத்துக்கு தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - வைகோ குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தவெக நிர்வாகிகளின் முறையற்ற திட்டமிடலே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகச் சாடினார். உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த அவர், அரசு மற்றும் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் சரியே என்றார்.

திருவண்ணாமலையில் அதிர்ச்சி.. இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் கைது!

திருவண்ணாமலை அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் செய்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தி.நகரில் ரூ.164.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை தி.நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ.720 உயர்வு!

தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.

கரூர் பெருந்துயரம்: மற்றொரு தவெக நிர்வாகி கைது!

கரூர் சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலாளர் மதியழகனை தொடர்ந்து மற்றொரு தவெக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தங்கம் விலை புதிய உச்சம்.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கரூர் சோகம்: "இதுபோல் இனி எங்கும் நடக்கக்கூடாது"- நிர்மலா சீதாராமன்

கரூர் துயர சம்பவம் போல் இனி நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது" என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கரூர் பெருந்துயரம்: அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம்- முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

"சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில் பொறுப்பற்ற முறையில், விஷமத்தனமான செய்திகளைத் தவிர்க்க வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின்" கேட்டுக்கொண்டுள்ளார்.

Heavy Rain: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விஜய் வேண்டுமென்றே தாமதமாக வந்தார்.. எஃப்ஐஆரில் அதிர்ச்சி தகவல்!

மக்கள் கூட்டத்தை அதிகப்படுத்தி, அரசியல் பலத்தைக் காட்டும் நோக்கத்துடன் விஜய்யின் வருகை வேண்டுமென்றே தாமதமாக்கப்பட்டது என்று எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் பெருந்துயரம்.. புதிய விசாரணை அதிகாரி நியமனம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. சவரன் ரூ.480 அதிகரிப்பு!

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.

கரூர் துயரம்: உயிரிழப்பு 41 ஆக உயர்வு; நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாகத் தீவிர விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

'தவெக கூட்டத்தில் கல் வீச்சுச் சம்பவம் நடைபெறவில்லை'- ஏடிஜிபி தேவாசீர்வாதம் விளக்கம்!

கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் அக்.4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.. 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன'- முதல்வர் ஸ்டாலின்

விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Heavy Rain: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: ஒரு சவரன் ரூ.85,000-ஐ தாண்டியது!

இன்று (செப். 27, 2025) தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு கிராம் ரூ.10,640-க்கும், ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.3,360 உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி அருகே இரட்டைக் கொலை: தாய், 13 வயது மகள் கழுத்தறுத்து படுகொலை!

கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூர் யாசின் நகரில் தாய் எல்லம்மாள் மற்றும் அவரது 13 வயது மகள் யாசிதா இருவரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி முடிந்து திரும்பிய மகன் கண்டு அளித்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

TVK தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணம்: இன்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3ஆம் கட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் 3ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று (செப்டம்பர் 27, 2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மேற்கொள்கிறார்.

நடிகர் விஜய்க்காகப் பால் விநியோகத்தை தடுத்த போலீஸ் - நடவடிக்கை எடுக்கக் கோரி பால் முகவர்கள் சங்கம் புகார்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயின் நாமக்கல் வருகையையொட்டி, பால் விநியோகம் செய்யச் சென்ற பால் முகவர் சங்க நிர்வாகியைத் தடுத்து நிறுத்தி, மிரட்டிய போக்குவரத்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.