சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத ஏற்றத்தைக் கண்டு வந்த நிலையில், இன்று காலை புதிய உச்சத்தைத் தொட்டது. எனினும், மாலையில் விலை கணிசமாகக் குறைந்து, நகைப்பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தங்கம் விலை
நேற்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிரடியாக உயர்ந்திருந்தன. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.12,830 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,02,640 ஆகவும் விற்பனையானது. மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.271 ஆகவும், ஒரு கிலோ ரூ.2,71,000 ஆகவும் விற்பனையானது.
காலை விலை நிலவரம்
மேலும், இன்று (ஜனவரி 7) காலையில் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.1,02,960 ஆக விற்பனையானது. ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870-க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் அதிரடியாக, ஒரு கிராமிற்கு ரூ.12 உயர்ந்து ரூ.283-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ.12,000 உயர்ந்து ரூ.2,83,000 என்ற உச்சத்தை எட்டியது.
மாலை நிலவரம்: விலைச் சரிவு
எனினும், காலை விலைக்குப் பிறகு மாலை நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் திடீரெனக் கணிசமாகக் குறைந்துள்ளன. மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,02,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.6 குறைந்து, ஒரு கிராம் ரூ.277-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.6,000 குறைந்து ரூ.2,77,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LIVE 24 X 7