தமிழ்நாடு

மீண்டும் ரூ. 1 லட்சத்தை தொட்ட தங்கம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1,120 உயர்ந்து, மீண்டும் 1 லட்ச ரூபாயை தாண்டி விற்னை ஆகிறது.

மீண்டும் ரூ. 1 லட்சத்தை தொட்ட  தங்கம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
Gold Rate
இரண்டு நாட்களாகக் குறைந்து நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் அளித்துவந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, இன்று (ஜனவரி 2) மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டவர்களைக் கவலை அடையச் செய்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

நேற்று (ஜனவரி 1) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.99,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, ஒரு கிராம் ரூ.12,440-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கம் மீண்டும் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி, ரூ.1,00,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,580-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை உயர்வு

தங்கத்தைப் போலவே, இரண்டு தினங்களாகக் குறைந்து வந்த வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.4,000 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.4 உயர்ந்து, ரூ.260-க்கு விற்பனையாகிறது. அதேபோல, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆண்டு தொடக்கத்தில் விலை குறைந்ததால் முதலீட்டாளர்களும் நகைப்பிரியர்களும் மகிழ்ச்சியடைந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்திருப்பது அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.