தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!
Gold Rate
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காகத் தங்கம் வாங்க நினைத்தவர்களுக்கு இந்த விலையேற்றம் மீண்டும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

தொடர் விலையேற்றத்தைத் தொடர்ந்து, இன்றும் (ஜன.07) தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.12,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் தற்போது ரூ.1,02,960 என்ற புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி அதிரடி உயர்வு

தங்கத்திற்குப் போட்டியாக வெள்ளி விலையும் இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.12 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.283-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,83,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் இந்தத் தொடர் விலை உயர்வு, சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, நகை வாங்குவோரைத் தயங்க வைத்துள்ளது.