தமிழ்நாடு

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்புக்கதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
TN Weather
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், நேற்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னை பெரம்பூரில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி

இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளத்தகா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், லட்சதீவு- குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

கனமழை எச்சரிக்கை

இதன்காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நாளை (ஜன.2) மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

அதேபோல் வரும் 7 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.