கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில் இன்று (டிசம்பர் 31) சற்றுக் குறைவு ஏற்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தை காரணிகள் மற்றும் முதலீட்டு மாற்றங்களால் விலை குறைந்திருப்பது, நகைப்பிரியர்களுக்குச் சற்று ஆறுதல் அளித்துள்ளது.
தங்க விலை சரிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.1,00,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து, ரூ.12,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.13,691-க்கும், ஒரு சவரன் ரூ.440 குறைந்து ரூ.1,09,528-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை
தங்கத்தைப் போல வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.258 என்ற அதே விலையில் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,58,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவு மற்றும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு போன்ற சர்வதேசக் காரணங்களால் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், இன்று சற்றுக் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LIVE 24 X 7