கடந்த அக்டோபர் மாதத்தில் ஏற்பட்டதைப் போலவே, தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மீண்டும் போட்டியிட்டுக்கொண்டு உயரத் தொடங்கியுள்ளன. நவம்பர் மாதத்தில் சிறிது சரிவைக் கண்டிருந்த நிலையில், தற்போது தங்கம் மற்றும் வெள்ளி விலையும் மீண்டும் வேகம் எடுத்து வருகின்றன.
வெள்ளி விலை ஏற்றம்
வெள்ளியின் விலையானது இந்த முறை தங்கத்தை விஞ்சும் அளவுக்கு அபரிமிதமான ஏற்றத்தைக் கண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமிற்கு ரூ.8 மற்றும் கிலோவிற்கு ரூ.8,000 எனப் பெரும் ஏற்றம் கண்டது. இதன் விளைவாக, ஒரு கிராம் வெள்ளி ரூ.207-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்த விலையானது கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி இருந்த உச்சபட்ச விலையை மீண்டும் எட்டியிருந்தது.
இன்று (டிசம்பர் 11), வெள்ளி விலை மேலும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கிராமிற்கு ரூ.2 மற்றும் கிலோவிற்கு ரூ.2,000 என மேலும் விலை உயர்ந்ததால், ஒரு கிராம் வெள்ளி ரூ.209-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை நிலவரம்
தங்கத்தைப் பொறுத்தவரை, நேற்றைய நிலவரப்படி கிராமிற்கு ரூ.30 மற்றும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,030-க்கும், ஒரு சவரன் ரூ.96,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 11) தங்கம் விலை மேலும் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, கிராமிற்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,050-க்கும், ஒரு சவரன் ரூ.96,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LIVE 24 X 7