வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மக்களைச் சந்திக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் கிராம கமிட்டி மாநில மாநாடு மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்ளும் மகளிர் பேரணி ஆகியவற்றை ஒருங்கிணைக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
மாநாடு மற்றும் பேரணி குறித்த அறிவிப்பு
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நடைப்பயணம் போன்றவற்றை அரசியல் தலைவர்கள் முன்னெடுத்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு முழுவதும் பங்கேற்கும் கிராம கமிட்டி மாநில மாநாட்டை ஒருங்கிணைப்பதற்காகக் குழுக்களுக்குத் தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்ளும் மகளிர் பேரணி சிறப்பாக நடத்திட ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்படுகிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றவர்கள்
இந்த முக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுக்களில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான கே.வி. தங்கபாலு, சு. திருநாவுக்கரசர், கே.எஸ். அழகிரி, எஸ். ஜோதிமணி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

LIVE 24 X 7