கடந்த இரண்டு நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளதால், நகை வாங்குவோரிடையே சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களின் நிலவரம்
தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த 21 ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.11,460-க்கும், ஒரு சவரன் ரூ.320 குறைந்து ரூ.91,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.92 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.
இதனைத் தொடர்ந்து, 22 ஆம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.11,630-க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,040-க்கும் விற்பனையானது. நேற்று ஞாயிறு என்பதால் அதே விலையிலேயே விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து, தற்போது ரூ.92,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து, ஒரு கிராம் ரூ.171-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LIVE 24 X 7