தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, நேற்று ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த நிலையில், இன்று ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது.
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம்
தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 13-ஆம் தேதி வரை விலை அதிகரித்து வந்து, பின்னர் குறைந்து காணப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் (நவம்பர் 18) ஒரு சவரன் ரூ.91,200-க்கு விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று மீண்டும் விலை அதிகரித்து இருந்தது.
நேற்று காலையில் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம், பிற்பகலில் அதேபோல் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் என மொத்தம் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,600-க்கும், ஒரு சவரன் ரூ.92,800-க்கும் விற்பனை ஆனது.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.173-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து, பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.1,73,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LIVE 24 X 7