தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை அதிரடி உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை அதிரடி உயர்வு!
Gold Rate
தொடர்ந்து ஏற்ற இறக்கத்தைக் கண்டு வரும் தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த மாத விலை நிலவரம்

கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவே இதுவரை இல்லாத உச்சபட்ச விலையாகப் பார்க்கப்பட்டது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கி, கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.89,000-க்குக் கீழ் வந்தது. அதனையடுத்துத் தங்கம் விலையில் ஏற்ற இறக்கமான நிலை நீடித்து வந்தது.

இன்றைய விலை விவரம்

தங்கம் விலை நேற்று (நவ.18) சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.91,200-க்கும், ஒரு கிராம் ரூ.11,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இன்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தைப் போலவே, வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.173-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,73,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.