தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், வார இறுதி நாளான இன்று அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் மீண்டும் ரூ.93,000-ஐ தாண்டி விற்பனையாகிறது. தங்கத்தை போல வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
நேற்றைய விலை நிலவரம்
கடந்த 18-ஆம் தேதி குறைந்தும், 19-ஆம் தேதி உயர்ந்தும் காணப்பட்ட தங்கம் விலை, அதன்பிறகு தொடர்ந்து சரிவில் இருந்தது. நேற்று முன்தினம் (நவம்பர் 20) ஒரு கிராம் ரூ.11,500-க்கும், ஒரு சவரன் ரூ.92,000-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11,460-க்கும், ஒரு சவரன் ரூ.91,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.92 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய அதிரடி விலை உயர்வு
தங்கம் விலை இன்று குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,630-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.93,040-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்வைக் கண்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.172-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,72,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LIVE 24 X 7