தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!
Gold Rate
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 அதிகரித்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விலை ஏற்ற இறக்கங்கள்

சென்னையில் தங்கம் விலை கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.91,600-க்கு விற்பனையானது. தொடர்ந்து, அக்டோபர் 28-ஆம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,000 குறைந்து ரூ.88,600-க்கு விற்பனையானது. அதன்பின்னர், தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தாலும், சவரன் ரூ.91 ஆயிரத்தைத் தாண்டாமல் இருந்து வந்தது.

நேற்றைய விலை

நேற்று காலை, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,410-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.91,280-க்கும் விற்பனையானது. தொடர்ந்து, அதே நாள் மாலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,480-க்கும், ஒரு சவரன் ரூ.91,840-க்கும் விற்பனையானது.

அதிரடி விலை உயர்வு

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.220 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.93,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை உயர்வு

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.170-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயர்ந்து, ரூ.1.70 லட்சத்துக்கு விற்பனையாகிறது.