தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாகச் சரிவைச் சந்தித்து வருகிறது. வார இறுதி நாளான சனிக்கிழமை (நவ.15) குறைந்த விலையைத் தொடர்ந்து, வாரத் தொடக்க நாளான இன்றும் (திங்கட்கிழமை) தங்கம் விலை குறைந்துள்ளது.
சமீபத்திய விலை ஏற்ற இறக்கங்கள்
கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்தது. காலையிலும் மாலையிலும் விலை மாறுபட்டதால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். கடந்த 13-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.95,000-ஐத் தாண்டி விற்பனையானது. எனினும், அதைத் தொடர்ந்து விலை குறையத் தொடங்கியது. வார இறுதி நாளான நவம்பர் 15-ஆம் தேதி, ஒரு சவரன் ரூ.92,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய விலை நிலவரம்
வாரத் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,540-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தைப் போலவே, வெள்ளி விலையும் இன்றும் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.173-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.2,000 குறைந்து, பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.1,72,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LIVE 24 X 7