மேகதாது அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதாக வெளிவரும் தகவல்களில் எள்ளளவும் உண்மை இல்லை என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் தொடர் சட்டப் போராட்டங்களை விவரித்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு விவசாயிகளின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று உறுதி அளித்துள்ளார்.
நீண்டகால சட்டப் போராட்டத்தின் பின்னணி
அமைச்சர் தனது அறிக்கையில், மேகதாது திட்டத்தை முறியடிக்கத் தமிழக அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளை விவரித்துள்ளார்:
2018ஆம் ஆண்டு: 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணையின் சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடகா சமர்ப்பித்ததை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
2020ஆம் ஆண்டு: சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கான ஆய்வு வரம்புகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காகக் கர்நாடக அரசு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை அணுகியபோது, தமிழ்நாடு அரசு மற்றொரு மனுவைத் தாக்கல் செய்து அதனைத் தடுத்து நிறுத்தியது.
2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தீர்மானம்: கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் மேகதாது திட்டத்திற்கு ₹1,000 கோடி ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசு எந்த அனுமதியும் அளிக்கக் கூடாது என வலியுறுத்தி, 21-3-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமரிடம் வலியுறுத்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலின், 31-3-2022 மற்றும் 26-5-2022 அன்று பிரதமரை நேரில் சந்தித்தபோது, மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது எனக் மத்திய ஜல்சக்தி அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் வலியுறுத்தினார்.
காவிரி ஆணையத்தில் தடுத்தது: இந்தக் காலக்கட்டத்தில், மேகதாது திட்டத்தின் விரிவான அறிக்கை பற்றிய விவாதப் பொருண்மைகள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் விவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டபோது, அதனைப் பரிசீலிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என 7-6-2022 அன்று தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக, அன்றிலிருந்து இன்றுவரை மேகதாதுவின் விரிவான திட்ட அறிக்கை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
வெற்றியின் அடையாளம்: தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகளின் பயனாக, மேகதாது அணை பற்றிய கருத்துருவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 9-2-2024 அன்று திருப்பியனுப்பியது. இது தமிழ்நாடு அரசின் முயற்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கர்நாடக முதல்வர் கூற்றுக்கு மறுப்பு
"மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று கர்நாடக முதல்வர் கூறிய கூற்று எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல என்று அமைச்சர் துரைமுருகன் மறுத்துள்ளார். அதிக மழைப்பொழிவு இருக்கும் ஆண்டுகளில் வேறு வழியின்றி மட்டுமே கர்நாடகா நீர் வழங்குகிறதேயன்றி, வறட்சி ஆண்டுகளில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீர் கிடைப்பதில்லை. மேகதாது அணை கட்டப்பட்டால், வறட்சி ஆண்டுகளில் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீர் கிடைக்காத சூழல் உருவாகும் என்பதே உண்மை" என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு
உச்ச நீதிமன்றம் இன்று அளித்த உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம் அளித்தார். அந்த உத்தரவில், மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் கருத்துக்கள் அனைத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமத்திடம் தெரிவிக்கலாம் என்றும், தமிழ்நாடு அரசின் கருத்துக்களைக் கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராகக் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் எந்தவொரு முயற்சியையும், தமிழ்நாடு அரசு முளையிலேயே கிள்ளி எறியும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

LIVE 24 X 7