தமிழ்நாடு

தங்கம் விலையில் அதிரடி மாற்றம்.. தற்போதைய நிலவரம் என்ன?

கடந்த 2 நாட்களாக உயர்ந்த வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவை கண்டுள்ளது.

தங்கம் விலையில் அதிரடி மாற்றம்.. தற்போதைய நிலவரம் என்ன?
Gold Rate
கடந்த இரண்டு நாட்களாக தொடர் உயர்வைக் கண்ட தங்கத்தின் விலையில், இன்று அதிரடியாக சரிந்துள்ளதது. அதே சமயம், வெள்ளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

தொடர் ஏற்றத்தின் பின்னணி

தங்கம் விலை கடந்த அக்டோபர் 22-ஆம் தேதியில் இருந்து சரிவைச் சந்தித்து வந்தது. ஒரு கட்டத்தில், அக்டோபர் 17-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்தில் இருந்த நிலையில், நவம்பர் 4-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.90,000 என்ற நிலைக்கு வந்தது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஏற்ற இறக்கத்துடன் நீடித்து வந்த தங்கம் விலை, கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் எகிறத் தொடங்கியது. நேற்று முன்தினம் (நவ.10) ஒரு சவரன் ரூ.91,840-க்கு விற்பனையானது.

நேற்று விலை கிராமுக்கு ரூ.220-ம், சவரனுக்கு ரூ.1,760-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.93,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய விலை நிலவரம்

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,600-க்கு விற்பனையாகிறது. தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,800-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை உயர்வு

தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலை இன்று உயர்ந்து காணப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.173-க்கு விற்பனையாகிறது. கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.1,73,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.