தமிழ்நாடு

தங்கம் விலை கடும் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,120 குறைந்துள்ளது.

தங்கம் விலை கடும் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
Gold Rate
தங்கம் விலை கடந்த மாதம் உச்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 குறைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த மாத விலை நிலவரம்

கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவே இதுவரை இல்லாத உச்சபட்ச விலையாகப் பார்க்கப்பட்டது. அதன் பிறகு விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அக்டோபர் 28-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.89,000-க்குக் கீழ் வந்தது. அதனையடுத்துத் தங்கம் விலையில் ஏற்ற இறக்கமான நிலை நீடித்து வந்தது.

இன்றைய விலை விவரம்

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,540-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை தடாலடியாகச் சரிந்துள்ளது. இன்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.91,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தைப் போலவே, வெள்ளி விலையும் இன்றும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.1,70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.