அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து...திருமங்கலத்தில் பரபரப்பு
திருமங்கலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருமங்கலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டையில் புதிதாக ஸ்மார்ட் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அடிப்படை வசதிகளில் இல்லாமல் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.
கொலை வழக்கு குறித்து வழக்கு பதிவு செய்த மகுடஞ்சாவடி போலீசார் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் 5 பேரை கைது செய்தனர்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனோ பரவல் இல்லை என்றும், கட்டாய முக கவசம் என தவறான செய்தி குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் நிர்மலா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 110 விழுக்காட்டிற்கு மேல் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய அரசு எடுத்த சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என்று திராவிட கழக தலைவர் கீ. வீரமணி தெரிவித்துள்ளார்.
கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்த ஆந்திர மாநில பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தொடர் மழை காரணமாக நெல்லை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அரும்பாக்கம் பகுதியல் உதவி இயக்குனரை காரில் கடத்தி, மிரட்டிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கைதாகியுள்ள நபர்களிடமிருந்து ரூ.29,000/- ரொக்கம், 2 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது. வெவ்வேறு பெயர்களால் வரக்கூடிய கொரோனா பாதிப்புகளால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை, தற்போது பரவி வரும் கொரோனாவால் பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டியதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
"வளமான விவசாயி நாட்டின் பெருமை" தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் மூலமாக ஓ.சிறுவயல் கிராமத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பில்லாமல் சமூக வலைதள கணக்குகளை பராமரித்து வரும் பெண்களை குறி வைத்து பாலியல் தொந்தரவு அளித்த நபரை கைது செய்துள்ளது சைபர் கிரைம் போலீசார்.
மதுரையில் தெப்பக்குளம் பகுதி அருகே போர்வெல்களில் இருந்து பெட்ரோல் நிறத்தில் ரசாயனம் கலந்து வரும் நீரினால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். கட்டிடப் பணிகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலையில் நீரின் நிலை உள்ளதாக ஆய்வக அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
என் அப்பாவின் கடைசி ஆசை நிறைவேற்றுவதற்காக எவரெஸ்டில் ஏறிய சிறுவன் ஆசிஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
திருவேற்காடு கோளடி கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் திட்டத்தை மாற்றம் செய்வதற்காக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து இடமாற்றம் செய்யப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
நகைக் கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கியின் வெளியிட்டி புதிய விதிகளின் அறிவிப்பை, முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என மதுரையில் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வேகமெடுத்து வரும் நிலையில், அதன் தாக்கம் கேரளா ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் எதிரொலிக்கிறது. அந்த வகையில் இன்று 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
நேற்றைய தினம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் ’வளமான விவசாயி நாட்டின் பெருமை’ என்கிற தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் நிகழ்வு தொடங்கியது.
சென்னை கோடம்பாக்கத்தில் வாஷிங் மிஷின் வெடித்ததால் வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகமான துணி போட்டு வாஷிங் மெஷினை பயன்படுத்தியதால் தான் தீ விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டின் நிதிப் பகிர்வு குறித்துப் பரிந்துரைகளை வழங்குவதற்காக 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
போலி ஆதார் அட்டைகளை தயாரித்து இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 7 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.65 கோடி ஏமாற்ற விட்டு தலைமறைவாக இருந்தவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து ஆண்டுதோறும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்க குழு அமைத்துள்ளது தமிழக அரசு.
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெட்ட கணக்கெடுக்கப்பட்ட 141 மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. இதற்காக மரங்கள் வேரோடு பிடுங்கிவேறு இடத்தில் நடும் பணி தொடங்கி உள்ளது.
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சத்தை வங்கி கணக்கில் தமிழக அரசு வரவு வைத்துள்ளது.