கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்சத்தைத் தொட்டு, ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலை, தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று (அக். 28) ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை நிலவரம்
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை ஏறியும் இறங்கியும் வந்த நிலையில், நேற்று (அக். 27) சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.91 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,450-க்கு விற்பனையானது.
இந்தச் சூழலில், இன்று தங்கம் விலை மேலும் அதிரடிச் சரிவைச் சந்தித்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் (8 கிராம்) நேற்று விற்பனையான விலையைவிட ரூ.1,200 குறைந்து இன்று ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று விற்பனையான விலையைவிட ரூ.150 குறைந்து இன்று ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
கடந்த 7 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் கிலோ ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கு விற்பனையாகி வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து இன்று ஒரு கிராம் ரூ.165-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து இன்று ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கு விற்பனையாகி வருகிறது.

LIVE 24 X 7