தமிழ்நாடு

10, 12-பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்!

10, 12-பொதுத்தேர்வுக்கான அட்டவணை நவ.4-ஆம் தேதி வெளியிடப்படும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

10, 12-பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்!
10th and 12th public exam Time Table
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை, வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படவிருப்பதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், இந்தத் தகவலை உறுதி செய்தார். வரும் நவம்பர் 4-ஆம் தேதி, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அந்தக் கூட்டத்தில் பொதுத் தேர்வு அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். கூட்டத்தின் நிறைவில், அன்றைய தினமே 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணைகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்வு கால அட்டவணை தயாரிப்பு

மாணவர்கள் பொதுத் தேர்வுக்குத் தயாராகும் வகையில், பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக் கால அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகிறது. பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதைக் கருத்தில் கொண்டு, பொதுத் தேர்வுத் தேதிகள் மற்றும் முடிவு வெளியாகும் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.