தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ரூ.1,080 அதிகரிப்பு!

ஆபரண தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் ரூ.3000 குறைந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ரூ.1,080 அதிகரிப்பு!
Gold Price
நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,000 சரிந்து நகை வாங்கக் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்த தங்கம் விலை, இன்று (அக். 29) மீண்டும் அதிரடியான ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து விற்பனையாகிறது.

தங்கம் விலையில் திடீர் மாற்றம்

கடந்த வாரத்திற்கு முன்னதாகத் தொடர்ந்து விலை உயர்ந்து உச்சத்தைத் தொட்ட தங்கம், தீபாவளிக்குப் பிறகு படிப்படியாகச் சரிந்து வந்தது. இந்தச் சரிவின் உச்சமாக, நேற்று (அக். 28) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,000 குறைந்தது.

நேற்று மாலை நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 88,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 11,075-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 135 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 11,210-க்கும், சவரனுக்கு ரூ. 1,080 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 89,680-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

நேற்று காலைச் சரிந்த பின் மாலையில் அதே விலையில் நீடித்த வெள்ளி விலையும் இன்று உயர்வைக் கண்டுள்ளது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 1 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 166-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,000 உயர்ந்து ரூ. 1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.