K U M U D A M   N E W S

தங்கம் விலை 'திடீர்' சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ₹880 குறைந்து ₹86,720-க்கு விற்பனை!

வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 3) ஒரே நாளில் சவரனுக்கு ₹880 வரை குறைந்து, ₹86,720-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ₹3,000 குறைந்துள்ளது. இது நகை வாங்குவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் சற்று ஆறுதல் அளித்துள்ளது.

ரூ. 60 கோடி தங்க நகை மோசடி: ART நிறுவன வழக்கில் மேலும் 4 பேர் கைது!

பாதி விலைத் தங்கம், வாரா வட்டி என கவர்ச்சிகரமான திட்டங்களால் பொதுமக்களிடம் ரூ. 60 கோடி மோசடி செய்த ART Jewellers நிறுவன வழக்கில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளனர்

அரசு மருத்துவமனை வளாகத்தில் மோதல்: கல்லூரி மாணவர்கள் வெறிச்செயல்!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு கல்லூரி மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு மாணவரிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்ரிமோனியால் மூலம் பழக்கம் – பெண்ணிடம் நகை திருடிய நபர் கைது

மேட்ரிமோனி மூலமாக பழக்கமான நபர் 2 சவரன் தங்கச் செயினை திருடி கொண்டு தப்பிச்சென்ற வழக்கில் போலீசார் கைது செய்து விசாரணை

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் நகைக்கடை அதிபர் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

சென்னையில் நகைக்கடையில் வருமானவரித்துறை சோதனை

சென்னையில் நகைக்கடை உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்

மயக்கமடைந்ததுபோல் நடித்து புரோகிதரிடம் நகைகள் திருட்டு...ரேபிடோ ஓட்டுநரை கைது செய்த போலீஸ்

மயக்கமடைந்தது போல நடித்து புரோகிதரிடம் இருந்து தங்க நகைகளைத் திருடிச் சென்ற ரேபிடோ ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை

பெண்ணிடம் கத்தியை காட்டி ஆந்திர நபர் செய்த செயல்...வாக்குமூலத்தில் சொன்ன வினோத காரணம்

ஆந்திர மாநில நபரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் கைவரிசை காட்டிய இளைஞர்...ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை

தான் மீன் வியாபாரம் செய்வதாகவும், மனைவியை பிரிந்த தனியாக இருப்பதால் தன்னுடன் வருமாறு பெண்ணிடம் பேச்சு கொடுத்து கைவரிசை கட்டியதாக போலீசில் கூறியுள்ளார்.

ஆலந்தூர் வங்கியில் நகை மோசடி: வாடிக்கையாளர்கள் முற்றுகை!

ஆலந்தூரில் உள்ள கத்தோலிக்க சிரியன் வங்கியில் வாடிக்கையாளர்களிடம் நகைகளை அதிக தொகைக்கு வைத்ததாகப் பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பாகத் தற்போது வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டுள்ளனர்.

கைப்புள்ள தூங்கு.. நகைகளை திருடிவிட்டு கோயிலுக்குள் தூங்கிய திருடன்

ஜார்கண்டில் உள்ள ஒரு காளி கோயில் நகைகளை திருடிய இளைஞன், அங்கே அசந்து தூங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

பொய் புகார் கொடுத்த நர்ஸ்.. எச்சரித்து ஜாமீனில் விடுவித்த போலீஸ்!

தனியாக நடந்து சென்ற போது பைக்கில் வந்த கும்பல் தங்க நகையை பறித்ததாக பொய் புகார் அளித்த நர்ஸை போலீசார் கைது செய்து எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர்.

சென்னையில் நகை வியாபாரி கடத்தல்.. ரூ.31 லட்சம் நகைகள் மற்றும் பணம் கொள்ளை!

சென்னையில் நகை வியாபாரியை கடத்திச் சென்று ரூ. 31 லட்சம், தங்க, வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். நம்பர் ப்ளேட்டை மாற்றி, வாகனத்தில் HEALTH டிப்பார்ட்மண்ட் ஸ்டிக்கர் வைத்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போதை மருந்து விற்பனை.. பணத்தில் கார், நகைகள் வாங்கி குவித்த பைனான்ஸ் அதிபர் கைது!

கோவையில் போதை மருந்து விற்பனை செய்த பணத்தில் கார், நகைகள் வாங்கி குவித்த பைனான்ஸ் அதிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நகை திருடிய போலி டாக்டர்.. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரபரப்பு!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போலி டாக்டர் நோயாளியின் தங்க நகைகளை திருடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவர் போலவே ஸ்டெதஸ் கோப் அணிந்து கொண்டு நோயாளிகளிடம் கைவரிசை காட்டியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் புதிய விதிகள்.. முழுமையாக நிறுத்தி வைக்க சு.வெங்கடேசன் வலியுறுத்தல்!

நகைக் கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கியின் வெளியிட்டி புதிய விதிகளின் அறிவிப்பை, முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என மதுரையில் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

2 லட்சத்திற்கு குறைவாக இருந்தால்.. தங்க நகைகடன் குறித்து சூப்பர் அறிவிப்பு!

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில், நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

81 வயது மூதாட்டியை தங்க நகைக்காக கழுத்தை நெரித்த பெண்.. மயிலாப்பூரில் அதிர்ச்சி

சென்னை மயிலாப்பூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த 81 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து தங்க நகைகள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து அக்கம்பக்கத்தினர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4% வட்டியில் தங்க நகை கடன்.. தமிழக விவசாயிகள் எழுப்பும் கோரிக்கை

தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உடனடியாக திரும்பப் பெறவும் கோரிக்கை விடுத்துள்ளது.

ரிசர்வ் வங்கி சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி உள்ளது- அமைச்சர் தங்கம் தென்னரசு

தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சேலம் அருகே மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து நகைகள் கொள்ளை...மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை

மூதாட்டியின் ஆடைகள் கலைந்த நிலையில் இருந்ததால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடைபெற்று கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடபழனியில் நகை வியாபாரியை கட்டிப் போட்டு நகை கொள்ளை!

சென்னை வடபழனியில் நகை வியாபாரியை கட்டி போட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை கைது செய்த போலீசார், 23 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அண்ணாமலையார் கோயில்: ரூ.50 லட்சம் மதிப்பிலான நகை.. பக்தரின் செயலால் நெகிழ்ச்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 750 கிராம் வைரக்கல், பச்சைக்கல், மரகத பச்சை ஆகியவற்றினால் ஆன தங்க ஆபரணங்களை பக்தர் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஊருக்குள்ள 'ராக்கெட் ராஜா' பாம்பு மூலம் தோஷம் கழிப்பு? நகையை பறிகொடுத்த பெண்!

அரியலூரில் அப்பாவி குடும்பத்திடம் இருந்து இளைஞர் ஒருவர் நகையை திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.