தமிழ்நாடு

தங்கம் விலை 'திடீர்' சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ₹880 குறைந்து ₹86,720-க்கு விற்பனை!

வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 3) ஒரே நாளில் சவரனுக்கு ₹880 வரை குறைந்து, ₹86,720-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ₹3,000 குறைந்துள்ளது. இது நகை வாங்குவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் சற்று ஆறுதல் அளித்துள்ளது.

தங்கம் விலை 'திடீர்' சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ₹880 குறைந்து ₹86,720-க்கு விற்பனை!
தங்கம் விலை 'திடீர்' சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ₹880 குறைந்து ₹86,720-க்கு விற்பனை!
கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான விலை உயர்வைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) கணிசமான சரிவைக் கண்டுள்ளது.

தங்கத்தின் முந்தைய விலை நிலவரம்

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 25-ஆம் தேதி ஒரு சவரன் ₹85 ஆயிரத்தையும், 29-ஆம் தேதி ₹86 ஆயிரத்தையும் தாண்டியது. நேற்று முன்தினம் (அக். 1) ஒரு சவரன் ₹87 ஆயிரத்தையும் கடந்து விற்பனையானது.

நேற்று (அக். 2) காலை விலை சவரனுக்கு ₹560 குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் சவரனுக்கு ₹560 அதிகரித்து ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் விலையான, ஒரு கிராம்: ₹10,950-க்கும், ஒரு சவரன்: ₹87,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய (அக். 3) தங்கம் மற்றும் வெள்ளி விலை

நேற்றைய உச்ச விலைக்குப் பிறகு, இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது:

வகை இன்றைய விலை ஒரு கிராம் ₹110 குறைந்து, ₹10,840 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ₹880 குறைந்து, ₹86,720 விறபனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

ஒரு கிராம் வெள்ளி விலை ₹3 குறைந்து, ₹161-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹3,000 குறைந்து, ₹1,61,000-க்கு விற்பனையாகி வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

தேதி விலை


03.10.2025 (இன்று) ₹86,720

02.10.2025 (நேற்று) ₹87,600

01.10.2025 ₹87,600

30.09.2025 ₹86,880

29.09.2025 ₹86,160

28.09.2025 ₹85,120

தொடர் விலையேற்றத்துக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு, நகை வாங்குவோருக்குச் சற்று ஆறுதல் அளித்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே 'வரலாறு காணாத உச்சத்தில்' கடுமையான விலை உயர்வைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலையில், இன்று (அக்டோபர் 03, 2025) திடீரென ஓர் அதிரடி விலைக் குறைவு ஏற்பட்டுள்ளது. தங்கப் பிரியர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இது 'நிம்மதி சிக்னலாக' பார்க்கப்படுகிறது.

பெரும் சரிவு:

இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 880 முதல் ரூ. 1,000 வரை குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விலைக் குறைவுக்குப் பிறகு, இன்றைய நிலவரப்படி:

ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம்: ரூ. 10,840

ஒரு சவரன் ஆபரணத் தங்கம்: ரூ. 86,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உச்சத்தில் இருந்த தங்கம்:

2025ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை 'ராக்கெட் வேகத்தில்' ஏறி வந்தது. செப்டம்பர் 6, 2025 அன்று முதல் முறையாக ரூ. 80,000-த்தை தாண்டிய தங்கம், சமீபத்தில் ரூ. 87,000-த்தை நெருங்கி விற்பனையானது. இந்த வரலாறு காணாத உயர்வுக்கு மத்தியில், இன்று ஏற்பட்டுள்ள திடீர் விலைச் சரிவு 'மார்க்கெட்'டில் பெரும் 'கவனம்' பெற்றுள்ளது.