தமிழ்நாடு

பெண்ணிடம் கத்தியை காட்டி ஆந்திர நபர் செய்த செயல்...வாக்குமூலத்தில் சொன்ன வினோத காரணம்

ஆந்திர மாநில நபரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 பெண்ணிடம் கத்தியை காட்டி ஆந்திர நபர் செய்த செயல்...வாக்குமூலத்தில் சொன்ன வினோத காரணம்
பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய நபர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆம்பூர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜாய்சி. ஓய்வு பெற்ற செவிலியரான இவரது மகன் சித்த மருத்துவராக உள்ள நிலையில், வீட்டில் ஜாய்சி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் கடந்த 5ஆம் தேதி காலை ஜாய்சி வீட்டிற்கு வந்து சித்த மருத்துவர் இல்லையா சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

நகையை பறிக்க முயற்சி

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜாய்சி மருத்துவர் யாரும் இல்லை என்று கூறிவிட மீண்டும் மாலையில் அதே நபர் மாஸ்க் அணிந்து தலையில் தொப்பி அணிந்து மீண்டும் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியுள்ளார். அப்பொழுது ஜாய்சி கதவைத் திறந்து மருத்துவர் இல்லையெனக் கூறியுள்ளார். இருப்பினும், அந்த நபர் வீட்டிற்கு உள்ளே அத்துமீறி நுழைந்து ஜாய்சியை உள்ளே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளைப் பறிக்க முயன்றபோது ஜாய்ஸி கத்தி கூச்சிலிடவே அவரது கழுத்தை நெரித்துள்ளார்.

இந்நிலையில் ஜாய்சியின் சத்தம் கேட்டு வீட்டின் மேல் தளத்தில் குடியிருக்கும் நபர் ஓடி வந்து பார்த்தபோது, ஜாய்ஸியின் கழுத்தை அவர் நெறித்துக்கொண்டிருப்பதை கண்டு கூச்சலிட்டு உள்ளார். உடனடியாகச் சுதாரித்திக்கொண்ட மர்ம நபர் வீட்டிலிருந்து அவசர அவசரமாகத் தெருவில் நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வேகவேகமாகச் சென்றுள்ளார்.

போலீசில் வாக்குமூலம்

அதனைத்தொடர்ந்து இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகிய நிலையில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.பெண்ணிடம் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட நபர் ஆந்திர மாநிலம் தேவராஜபுரம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பது தெரியவந்தையடுத்து திருப்பதியை வாணியம்பாடி நகர காவல்துறையினர் கைது செய்தனர்.

போலீசார் விசாரணை செய்தபோது, தேவராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாராய வியாபாரம் செய்து வந்துள்ளதாகவும், அதனைக் காவல்துறையினர் முடக்கியதால் வேறு வழி இல்லாமல் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுப்பட்டு வருவதாகவும், காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து திருப்பதி மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.