தமிழ்நாடு

ஆலந்தூர் வங்கியில் நகை மோசடி: வாடிக்கையாளர்கள் முற்றுகை!

ஆலந்தூரில் உள்ள கத்தோலிக்க சிரியன் வங்கியில் வாடிக்கையாளர்களிடம் நகைகளை அதிக தொகைக்கு வைத்ததாகப் பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பாகத் தற்போது வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டுள்ளனர்.

ஆலந்தூர் வங்கியில் நகை மோசடி: வாடிக்கையாளர்கள் முற்றுகை!
மாநிலங்களவைக்கு செல்லும் கமல்ஹாசன் – ரஜினிகாந்தை நேரில் சந்தித்து மகிழ்ச்சி பகிர்வு!
ண்டி ஜிஎஸ்டி யில் கத்தோலிக் சிரியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஏராளமான வியாபாரிகளும் பொதுமக்களும் வங்கி பணவர்த்தனை செய்து வருகின்றனர். தங்க நகை கடனுக்குக் குறைந்த வட்டி என்பதால் ஏராளமானோர் இங்குத் தங்க நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்த வங்கியில் பணியாற்றக்கூடிய மேலாளர் சாமிநாதன் வாடிக்கையாளர்கள் வைத்த தங்க நகைகளைக் கூடுதல் தொகைக்கு வைத்ததாகப் போலி கணக்கு காண்பித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வங்கியில் இருப்பவர்கள் வீடுகளில் சென்று நகைகளை அடமானம் வைக்கக்கூடிய அளவிற்கு நெருக்கமாக மேலாளர் இருந்த நிலையில் மேலாளரை நம்பி சுமார் ஒரு கோடி ரூபாய் வரை நகையை அடகு வைத்துள்ளனர். ஆனால் அந்த நகைகளை மேலாளர் சுவாமிநாதன் கூடுதலான தொகைக்கு அடமானம் வைத்ததாக மோசடி செய்துள்ளார். இவருடன் வங்கி ஊழியர்கள் திவாகர், பிரசாத், சாருமதி ஆகிய ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

கடந்த 2 ஆம் தேதி சைதாப்பேட்டை சுலைமான் என்பவர் 90 லட்சம் ரூபய்க்கு நகை அடமானம் வைத்துள்ளார். இவருடைய நகையை வீட்டில் சென்று பிரசாத் என்பவர் கலைக்சன் செய்துள்ளார். ஆனால் அந்த நகை தற்போது வங்கியில் ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த வெறொருவரது பெயரில் வங்கியில் இருப்பதாகத் தெரிகிறது.

இதேபோல் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் பல லட்சம் ரூபாயை மோசடி செய்திருப்பதாகவும் தற்போது தகவல்கள் தெரிகிறது. இதுகுறித்து சாமிநாதனிடம் கேட்கும் வாடிக்கையாளர்களிடம் தற்கொலை செய்து விடுவதாகச் சாமிநாதன் மிரட்டுகிறாராம்.