மயிலாடுதுறையில் 48 கோடி ரூபாய் மதிப்பில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 113 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதுமட்டும் இல்லாமல் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜகவின் சதுரங்க வேட்டையில் சிக்கி அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அடமானம் வைத்துவிட்டார் என்றார். தனது குடும்பத்தைக் காப்பாற்றவே அமித்ஷா வீட்டின் கதவை எடப்பாடி பழனிசாமி தட்டினார் என்றும் அவர் விமர்சித்தார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி என்ன சாதனை செய்தார்? என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் நிரந்தரமாக Bye.. Bye.. சொல்லுவார்கள் என்று தெரிவித்தார்.
கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்து வருவதாகவும், மீனவர் பிரச்னையில் பிரதமர் மோடி தலையிட்டுத் தீர்வ காண வேண்டுமெனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.