தமிழ்நாடு

சென்னையில் நகைக்கடையில் வருமானவரித்துறை சோதனை

சென்னையில் நகைக்கடை உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்

சென்னையில் நகைக்கடையில் வருமானவரித்துறை சோதனை
சென்னையில் நகைக்கடையில் வரிமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
சென்னை சவுகார்பேட்டை வீரப்பன் தெருவில் அமைந்துள்ள (டி.பி.கோல்டு பிரைவேட் லிமிடெட்) தனியார் தங்க கடை நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆந்திராவை பூர்வீகமாக கொண்டு தமிழகத்தில் பல்வேறு கிளைகள் செயல்பட்டு, ஹோல்சேல் பிஸ்னஸில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமானவரித்துறை சோதனை

இதேபோல பூக்கடையில் நகை வியாபாரி ஒருவரது இல்லத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கம் விற்பனை தொடர்பான ட்ரான்ஸாக்சன் நடைபெறுவதால், இதில் வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்துள்ளதா? என்ற கோணத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனை நிறைவுக்கு பின்னரே வரி ஏய்ப்பு ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா உள்ளிட்ட தகவல்கள் தெரியவரும் என வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் சோதனையால் சென்னை சவுகார்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வரி ஏய்ப்பு புகார்

சென்னையில் கடந்த வாரம் ஜவுளிக்கடையில் உரிமையாளருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இயங்கி வந்த ஜவுளிக்கடை உரிமையாளர் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.