K U M U D A M   N E W S

நீதிமன்றம்

அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகும் வேலை.. நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி இறப்புகளுக்கு இழப்பீடு?

கொரோனா தடுப்பூசி செலுத்தி இறந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு சாத்தியமா?

சுழற்சி முறையில் பல்கலைக்கழக துறைத்தலைவர் நியமனம்.. நீதிமன்றம் உத்தரவு

சென்னை பல்கலைக் கழகத்தில் துறை தலைவர்கள் நியமனம், தகுதி, திறமை அடிப்படையில் சுழற்சி முறையில் நியமனம் செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட திருத்தத்தை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொளத்தூர் சோமநாத சுவாமி கோவில் நிலம் குத்தகை வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கை சென்னை  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சட்டம் இங்கே..பாதுகாப்பு எங்கே? அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்.. அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கக்கூடிய சட்டத்தின் தற்போதைய நிலை என்ன? பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவர்களின் நிலை என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....

காலி பணியிடங்கள் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை நிரப்ப உத்தரவு.

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை 3 மாதத்தில் நிரப்ப வேண்டும்- நீதிமன்றம் கெடு

தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை மூன்று மாதங்களில் நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Anna University Case: மாணவி வன்கொடுமை - குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பு

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு முக்கிய உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொ*ல, கொள்ளை வழக்கு - நீதிமன்றத்தில் இன்று விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்கு வருகிறது.

ஜாபர் சாதிக் ஜாமீன் கோரி மனு.., உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், அமலாக்கத்துறை பதிலளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த வழக்கு இன்று வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது.

பள்ளி, கல்லூரிகளின் சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா..? விளக்கமளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் - நடிகை விஜயலட்சுமி

சீமான் மீதான வழக்கை முடித்து வைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில்,  நீதிமன்றத்திற்கு தான் முழு ஒத்துழைப்பு தருவேன் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.  

கோவிலில் பிரச்னை ஏற்படுத்த முயற்சித்தால் வழக்குப் பதிவு - சென்னை உயர்நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலை வாங்கி தருவதாக 50 லட்ச ரூபாய் வரை மோசடி... முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி 50 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவியின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கமா? இல்லயா? என்பது விளக்கமளிக்க காவல்துறைக்கு உத்தரவு

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பது குறித்து தெளிவுபடுத்த காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tamil Nadu Fishermen Fined 1 Crore Rupees: ஒரு மீனவருக்கு ஒரு கோடி அபராதமா? Rameswaram | Sri Lanka

ஒரு மீனவருக்கு 18 மாத சிறை மற்றும் படகோட்டிக்கு ரூ.1.20 கோடி அபராதம் இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம்

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்தது - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் உள்ள லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

யூடியூபுக்கு புதிய Rules? influencers மீது பாயப்போகும் நடவடிக்கை? ’இனி இதையெல்லாம் பண்ணகூடாது!

யூடியூபில் influencers எனக் கூறிக்கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கிவரும் யூ டியூபர்கள் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் கூறிய கருத்து என்ன? யூடியூப் கிரியேட்டர்களுக்கு புதிய விதிமுறைகள் வரப்போகிறதா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

சீமானின் முதல் மனைவி யார்? விஜயலட்சுமியுடன் ரகசிய திருமணம்? சீமானை நெருக்கும் நீதிமன்றம்!

நடிகை விஜயலட்சுமி தான் சீமானின் முதல் மனைவியா என்று சென்னை உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது, நாம் தமிழர் தம்பிகளை கதிகலங்க வைத்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு - இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

உச்சநீதிமன்றத்தில் முன்னுரிமை அடிப்படையில் இன்று விசாரணை.

தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் – உச்சநீதிமன்றத்தில் முறையீடு

தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் முறையீடு.

GOLF மைதானத்தில் நீர்நிலை அமைப்பதற்கான பணிகள் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

"சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோஃல்ப் மைதானத்தில் நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது"

ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கும் பணி.. தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள  கோல்ஃப் மைதானத்தில், நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லுாப் சாலையில் தடையில்லாத போக்குவரத்து - காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.