இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வக்ஃபு திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்ததற்கும், வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்கவும், வக்ஃபு வாரியங்கள் மற்றும் கவுன்சிலகளில் முஸ்லீம் அல்லாதவர்களை நியமிப்பதை தடுக்கவும் இடைக்கால உத்தரவை பிறப்பித்ததற்கும் உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.
அதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், இந்திய ஜனநாயக நாட்டில் எப்பேர்ப்பட்ட சர்வாதிகாரிகள் வந்தாலும் இறுதியாக ஜனநாயகமே வெல்லும் என்பதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனமார வரவேற்பதாக கூறியுள்ளார்.
அதேபோல், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் எப்போதும் துணை நிற்பேன் எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.