சினிமா

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? வெளியான புதிய தகவல்!

கலக்கல் காமெடி, குக் மற்றும் கோமாளிகளுக்கு இடையிலான கலாட்டங்களால் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 6 எப்போது ஒளிபரப்பாக உள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? வெளியான புதிய தகவல்!
குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? வெளியான புதிய தகவல்!
சமையல் ப்ளஸ் காமெடி என கலகலப்பான காம்போவுடன் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி தற்போது வரை 5 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில், 6வது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். தமிழ் சமையல் ரியாலிட்டி ஷோவான குக்கு வித் கோமாளி, அதன் ஆறாவது சீசனுடன் பிரமாண்டமாக திரும்புகிறது. இதுதொடர்பாக விஜய் டி.வி. வெளியிட்டுள்ள புரோமோ வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதிரடி சரவெடியான காமெடியால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள குக் வித் கோமாளியின் 6வது சீசனுக்கான சமையல் கலைஞர்களை தேடுவதற்கான ஆடிஷன்கள் இன்னும் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே இந்நிகழ்ச்சிக்கான புரோமோ ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதன் மூலமாக கோமாளிகளாக புகழ், சரத், ராமர் மற்றும் சுனிதா ஆகியோர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இதனால் இந்த சீசன் இன்னொரு பிளாக்பஸ்டர் சீசனாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் இந்நிகழ்ச்சியை தொகுப்பாளர் ரக்‌ஷன் மீண்டும் தனது வழக்கமான பாணியில் கலகலப்பாக தொகுத்து வழங்கவுள்ளார். நடுவர்களாக செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் மீண்டும் களமிறங்குகிறார்கள். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை தயாரித்த பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ தான், இந்த முறை குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியை தயாரிக்கவுள்ளது. பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ முன்பு விஜய் தொலைக்காட்சிக்காக பிக்பாஸ் ஜோடிகள், கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் சீசன் 5 முதல் 8 வரை, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், ராஜூ வூட்லா பார்ட்டி போன்ற பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளது. அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் செல்லம்மா, பனி விழும் மலர் வனம், தாழம் பூ, தென்றல் வந்து என்னைத் தொடும் ஆகிய சீரியல்களையும் தயாரித்துள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெற்றிக்கொடி நாட்டியதைப் போலவே பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ நிறுவனம் ஓடிடியிலும் பட்டையைக் கிளப்பியுள்ளது. ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திற்காக ஆபீஸ், தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஓம் காளி ஜெய் காளி போன்ற சூப்பர் ஹிட் வெப் தொடர்களைத் தயாரித்துள்ளது. 'டி.வி., ஓடிடிக்கு அடுத்தப்படியாக சினிமா துறையிலும் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ வெற்றிகரமாக கால் பதித்துள்ளது. நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் “கெனத்த காணோம்” படத்தை பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை விட சீசன் 6 செம்ம டாப்பாக இருக்கும் என்பதை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்ட புரோமோஷன் வீடியோவிலேயே தெளிவுப்படுத்தியிருக்கிறது. அந்த புரோமோவில் அந்த ப்ரோமோவில், 'சரத், சுனிதா, ராமர், புகழ் உள்ளிட்டோர் இடம் பெற்று இருக்கிறார்கள். அவர்களை நோக்கி ஒரு பெண்மணி, 5 சீசன்களாக அரைத்த மாவைத்தானே இதிலும் அரைக்கப்போகிறீர்கள்.. அதே காமெடி.. அதே கோமாளி.. இதில் என்ன புதிதாக இருக்கப்போகிறது.. என்று கேட்கிறார். அதற்கு அவர்கள் இந்த நிகழ்ச்சி புதிதாக மட்டுமல்ல, பெரிதாகவும் இருக்கப்போகிறது.. ஸ்ரெஸ்க்கு கொடுங்க ரெஸ்ட்.. இது குக் வித் கோமாளி 6' என்று சொல்கிறார்கள்.

இதன் மூலமாக சீசன் 5 நிகழ்ச்சியில் எழுந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் குக் வித் கோமாளி சீசன் 6 தரமான சிறப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் புது வரவாக பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்து கொண்ட செளந்தர்யா, குக் வித் கோமாளி சீசன் 6-ல் கோமாளியாக பங்கேற்கவுள்ளார். இவர் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் புளிக்குழம்பு வைத்து பிரபலமானவர் என்பதால், இவரது வருகைக்காக குக் வித் கோமாளி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.