ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவர் ஆனந்தனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் வழக்கறிஞராக இருப்பதாகவும், ஆனந்தனின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு குழந்தை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குழந்தை பிறந்த பின்னர் தனது மனைவியை ஆனந்தன் மற்றும் அவரது மனைவி அழைத்துக்கொண்டு சென்றதாகவும், அதன் பின்னர் தொடர்ச்சியாக தான் செல்லும் இடங்களில் கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயல்வதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு ஆனந்தனும், அவரது மனைவியும் தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏற்கனவே பட்டாபிராம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலான நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 2014-ஆம் ஆண்டு வில்லியம்ஸ், ஆனந்தனிடம் ஜூனியர் வழக்கறிஞராக இணைந்துள்ளார். 8 வருடங்களாக ஜூனியராக பணிப்புரிந்து வந்த நிலையில் ஆனந்தனின் மகளுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வில்லியம்ஸ் திருமணமாகி விவகாரத்து ஆனதாக தெரிகிறது.
இந்நிலையில் ஆனந்தனின் மகள் 2022-ல் டெல்லியில் சட்டப்படிப்பு படித்துவிட்டு வந்த நிலையில் வில்லியம்ஸ், ஆனந்தனின் மகளுக்கு இடையில் இருந்த பழக்கத்தால் அவர் கர்ப்பமானதாகவும், ஆனந்தனின் மகளை மூளை சலவை செய்து திருமணம் செய்து பட்டாபிராமில் ஒன்றாக இருந்துள்ளார்.
ஆனந்தனின் மகளுக்கு, வில்லியம்ஸ் ஏற்கனவே திருமணம் செய்யப்பட்டது தெரிய வரவே வில்லியம்ஸை விட்டு பிரிந்து தனது அப்பாவான ஆனந்தனோடு வாழ்ந்து வருவதாகவும், சிங்கிள் மதராக தனது குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கியுள்ளதாக ஆனந்தன் தரப்பில் கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்ட இரண்டு கட்சி நிர்வாகிகளை மாநிலத் தலைவராக ஆனந்தன் பொறுப்பேற்ற பிறகு கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்ததால் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த வில்லியம்ஸ் தற்போது இதுபோன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளதாக அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பட்டாபிராம் கோபாலபுரம் பகுதியில் வசித்து வரும் வில்லியம்ஸ் வெளியிட்ட வீடியோ தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.