சினிமா

உடை மாற்ற உதவட்டா? போதையில் அத்துமீறிய உச்ச நடிகர்? பகீர் கிளப்பும் பிரபல நடிகை!

ஷூட்டிங் ஸ்பாட்டில் போதையில் இருந்த உச்ச நடிகர் ஒருவர் தன்னிடம் அத்துமீறியதாக மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் கூறியிருக்கும் குற்றச்சாட்டு மலையாள திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடை மாற்ற உதவட்டா? போதையில் அத்துமீறிய உச்ச நடிகர்? பகீர் கிளப்பும் பிரபல நடிகை!
உடை மாற்ற உதவட்டா? போதையில் அத்துமீறிய உச்ச நடிகர் பகீர் கிளப்பும் பிரபல நடிகை!
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2017ஆம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டனா். இதைத் தொடர்ந்து கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமா தலைமையில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இதனையடுத்து முறையாக ஆய்வு செய்த ஹேமா கமிட்டி அறிக்கை ஒன்றை சமர்பித்தது.

அந்த அறிக்கையில், கேரளா சினிமா துறையில் சில கிரிமினல்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்காக இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் நடிகைகளை அட்ஜெஸ்மெண்ட் செய்ய வற்புறுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நடிகைகளுக்கு சம ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும், அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி கூட நடிகைகளுக்கு இல்லை என்றெல்லாம் ஹேமா கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை மலையாள திரையுலகில் மட்டுமல்லாது மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து, மலையாள திரையிலகில் முன்னணி நடிகர்கள் சித்திக், நிவின் பாலி, முகேஷ், மலையாள இயக்குநர் ரஞ்சித் என பலரும் பாலியல் புகாரில் சிக்கினர்.

இந்நிலையில் மலையாள திரையுலகில் 2019ம் ஆண்டில் வெளியான விக்ரித்தி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை வின்சி அலோஷியஸ், இதுவரை மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார். இதில் ஏதோ ஒரு படத்தின் ஷூட்டிங்கின் போது தனக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக அவர் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வின்சி அலோஷியஸ், ”இனி போதை பழக்கத்தை கொண்டுள்ள நடிகர்களுடன் நான் நடிக்கப்போவதில்லை” என அறிவித்திருந்தார்.

இவரது இந்த அறிவிப்பு மாநிலம் முழுக்க பேசுபொளாக இதற்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன என்ற கேள்வி எழுந்தது.. இதற்கு விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டிருந்தார் அந்நடிகை. அந்த வீடியோவில், ஒரு படத்தின் ஷூட்டிங்கின் போது, ஸ்பாட்டில் என்னுடைய உடையில் ஏதோ பிரச்சனை இருந்தது. அதை சரிசெய்ய நான் சென்றபோது, உன்னுடைய உடையை சரிசெய்ய நானும் வருகிறேன் என அப்படத்தின் ஹீரோ அனைவர் முன்பும் கூறினார். இது எனக்கு மிகவும் அசௌகரியமாக இருந்தது. அந்த நடிகரின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை, ஆனால் அவர் அப்போது போதையில் இருந்தார். இதனால் தான் நான் அவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டேன்” என அவர் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே மலையாள திரையுலகில் பல பாலியல் தொல்லை புகார்கள் வெளிச்சத்துக்கு வந்துக்கொண்டிருக்கும் இந்த வேலையில், நடிகை வின்சி தனக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.