K U M U D A M   N E W S

நீதிமன்றம்

மாதவிடாய்னு கூட பார்க்காம.. மாமியார் செய்த கொடுமை.. விவாகரத்தில் முடிந்த மூடநம்பிக்கை!

மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் உடலியங்கியல் மாற்றம். இதை பற்றி அசிங்கப்படவோ, இதை வெறுத்தொதுக்கவோ, அஞ்சவோ தேவை இல்லை. ஆனால், இன்றும் மாதவிடாய் குறித்து சிலரிடையே சந்தேகங்களும், மூடநம்பிக்கைகளும் இருந்து தான் வருகிறது. அப்படி ஒரு மூடநம்பிக்கையால் மாமியார் படுத்திய கொடுமைக்கு மருமகள் செய்த சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

சட்டவிரோதமாக வீட்டை இடித்த வழக்கு: நடிகை கவுதமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது" - எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம்

இல்லாத அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

விதிகளை பின்பற்றியே அரசு பணி நியமனம்... தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி..!

எதிர்காலத்தில் அரசு துறைகளில் விதிகளை பின்பற்றியே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுத்தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானசேகரன் வழக்கு; சிபிஐக்கு மாற்றக்கோரி மனு

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீதான 20 வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி மனு

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

ஆளுநர் மசோதாக்களை ஏன் நிறுத்திவைக்கிறார் என்று உச்சநீதிமன்றம் கேள்வி

ஆளுநர் RN ரவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

"மசோதா மறு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது " முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு மவுனமாக இருக்கலாமா?"

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சிறை தண்டனையை ரத்து செய்த உயர் நீதிமன்றம்

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்.. ஏப்ரல் முதல் அமல்.. தமிழ்நாடு அரசு தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

ஆளுநர் -தமிழ்நாடு அரசு இடையிலான மோதல்.. உச்சநீதிமன்றம் கருத்து

ஆளுநர், தமிழக அரசு இடையிலான மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

4 மாதத்தில் காலி ஆகிறது எம்.எம்.காலனி.. என்ன காரணம் ?

மெட்ரோ ரயில் பணிக்களுக்காக, சென்னை மாதவரம் எம்.எம். காலனியை 4 மாதத்தில் காலி செய்து கொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்.. உயர் நீதிமன்றம் உத்தரவு

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது போதுமான இடைவெளியுடன், உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு விதிமுறைகளை வகுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஆளுநர் நீக்கம்? – உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழக ஆளுநரை நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரி மனு.. அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட  வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நித்தியானந்தா-பிரேமானந்தா என்றாலே பிரச்சனைதான்.. உயர் நீதிமன்றம் கருத்து

நித்தியானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா போன்றவர்கள் என்றாலே பிரச்னையாக இருக்கிறது என்று தெரிவித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் நித்தியானந்தா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு இல்லை - டெல்லி உயர்நீதிமன்றம்

என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்

உள்துறை செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

உள்துறை செயலாளர் இன்று ஆஜராகாவிட்டால், வாரண்ட் பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு... இடித்து அகற்றிய அதிகாரிகள்

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றம்

முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஆர்டர்லி முறை.. தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சிறைகாவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நேரில் ஆஜராக தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

வழக்குகளில், காவல்துறையினர்  குறித்த காலத்திற்குள் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்,  ஜனவரி 31ம் தேதி நேரில் ஆஜராகும்படி தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பக்ரூதின் வழக்குகளை விரைந்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

போலீஸ் பக்ரூதின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமின் வழங்கும்போது நிபந்தனைகளை எளிதாக்க அறிவுறுத்தல்

நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து எந்தப் பயனும் இல்லை -சென்னை உயர்நீதிமன்றம்

ஈரோடு (கி) இடைத்தேர்தல் - மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி..?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருவை களைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவெடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

மைனராக இருந்தாலும், கருவை களைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அச்சிறுமியின் 24 வார சிசுவை களைக்க அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளது.