ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் மணிகூண்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்த பின், செய்தியாளர்களை சந்தித்தார். அபோது பேசிய அவர், அமைச்சர் முத்துசாமி, மாநில அரசு எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை அறிந்து நியாமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும், மற்றவைகளை பற்றி கருத்து சொல்வதில் உடன்பாடு இல்லை என்றும் தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை உறுதிபடுத்தும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாகவும், அதற்கு இதே ஒரு சான்றாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஆளுநருக்கு என்ன சொல்ல வேண்டுமோ? அதனை உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளதால், நாங்கள் சொல்வது நாகரீகமில்லை என்று கூறினார். தமிழகத்திற்கும் நீட் தேர்வு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இந்த விவகாரம் மத்திய அரசுக்கு எதிராக போராட கூடிய செயல் என்பதால் இதில் அரசியல் இல்லை என்று கூறினார்.
திமுக ஆட்சி ஊழல் நிறைந்துள்ளதால், 2026 ஆம் ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித்ஷா கூறுவதற்கு, திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என பொதுமக்கள் கூறி வருவதாகவும், 200 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என கூறிய அமைச்சர் முத்துசாமி, திமுக ஆட்சி அமைத்த பிறகு சந்தித்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பது, மக்கள் திமுக மீது வைத்துள்ள நம்பிக்கை தான் காரணம் என்றார்.
தமிழுக்காக போராடும் திமுக கோப்புகளில் ஆங்கிலத்தில் தான் கையொழுத்து போடுகிறது என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, நாங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் தான் கையொழுத்து போடுவதாகவும், நீட்தேர்வு விலக்கு பெறுவதிற்கான இரகசியம் ஒன்றுமில்லை என்றும் அந்த தேர்வு வேண்டாம் என்று தான் கூறி வருதாகவும் தெரிவித்தார்.
சட்டமன்ற கூட்டதில் எதிர்கட்சிகள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும், அனைத்து நிகழ்வுகளும் ஔிபரப்பு செய்து வருவதாகவும் கூறிய அமைச்சர் முத்துசாமி, கடந்த 4 வருடங்களில் சட்டமன்றம் அறிவித்த 7 அறிவிப்புகள் மட்டும் சாத்தியக்கூறுகள் இல்லாததால் நிறுத்தி வைக்கப்படுள்ளதே தவிர, மன்ற அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது அறிவித்துள்ள 27 அறிவிப்புகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சிறுபாண்மை மக்களை பாதிக்க கூடிய வக்பு வாரிய திருத்த சட்டம் மீதான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதாகவும், அதற்கான போராட்டங்கள் குறித்து தலைமை அறிவிக்கும் என கூறினார்.