தமிழ்நாடு

தமிழக ஆளுநர் விவகாரம்: எனக்கு காது கேட்க மாட்டேங்குது - நாகலாந்து ஆளுநர் பதில்

தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் எனக்கு இந்தக் காது வேலை செய்ய மாட்டேங்குது மிஷின் வைக்க வேண்டும் என்று கூறினார்.

தமிழக ஆளுநர் விவகாரம்: எனக்கு காது கேட்க மாட்டேங்குது - நாகலாந்து ஆளுநர் பதில்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று நடைபெற்ற கம்பன் திருநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாகலாந்து ஆளுநர் இல. கணேசன், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காரைக்குடி கம்பன் கழகம் மிக தொன்மையானது, சிறப்பானது, போற்றுதலுக்கு உரியது.

இந்நிகழ்ச்சியில் என்னை கலந்து கொண்டு பேச அழைத்ததன் பேரில், மகிழ்ச்சியுடன் அதனை ஏற்று நேற்று (ஏப்.9) பங்கேற்றேன். இன்று (ஏப். 10) ராஜா அவர்களின் வீட்டிற்கு வந்துள்ளேன் ராஜாவின் தந்தை மற்றும் ஹெச். ராஜா குடும்பத்தார் எனது குடும்பத்தார் போன்றவர்கள். இந்த குடும்பத்தில் நான் ஒரு உறுப்பினர் போல் இருக்கிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாகலாந்து மாநிலம் மிக குளிர்ச்சியான மாநிலம், அனைவரும் அங்கு வரவேண்டும் மாநிலம் முழுவதும் இயற்கை எழில் நிறைந்த மாநிலமாக உள்ளது. நாகலாந்தில் ஒரு காலகட்டத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகள் போராடினார்கள். ஆனால் பாரதப் பிரதமராக மோடி வந்த பின்பு அந்த போராளிகளுக்கும், அரசுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது . நாங்கள் ஆயுதத்தை எந்த மாட்டோம் என்று கூறி அதை உண்மையாக கடைபிடிக்கின்றனர்.

மற்றபடி எல்லா மாநிலத்திலும் உள்ளவாறு ஒரு சில பிரச்சினைகள் இருக்கு அதை மாநில முதலமைச்சர் தீர்த்து வைப்பார்கள் என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள், சமீபத்தில் ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இந்த காது வேலை செய்ய மாட்டேங்குது மிஷின் மாட்ட வேண்டும் என்று கூறி சென்றார்.