இந்தியா

ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது, அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


ஆளுநருக்கு காலக்கெடு

மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்தது உச்ச நீதிமன்றம்; அமைச்சரவையின் ஆலோசனையின்படி மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது குறித்து ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் மசோதாக்களை நிறுத்தி வைப்பது குறித்து 3 மாதங்களுக்குள் ஆளுநர்கள் முடிவெடுக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளது.


ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது

இரண்டாவது முறையாக பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதம்; ஆளுநருக்கு என தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லை இந்த விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை; ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிரானதாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் நாங்களே ஒப்புதல் அளிக்கிறோம்; உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு. 'எங்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை' என குறிப்பிட்டு தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு உடனடி ஒப்புதல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.