சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இன்று பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சமீபத்தில் நடத்திய வெற்றிப் பேரணி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமல் பேரணிக்கு ஏற்பாடு செய்ததன் விளைவாக ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள்குறித்து கர்நாடக அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் - கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
போதைப் பொருள் கடத்தல், விற்பனை மட்டுமல்ல, பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமே. போதை பொருள் நுகர்வோருக்கும் 6 மாதம் முதல் 2 ஆண்டு சிறை தண்டனை. இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
கடன் வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் கடன் வசூல் ஒழுங்கு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவரும் திருக்குறளும் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்த நிலையில், திருக்குறள் சனாதனத்திற்கும் புதிய கல்விக்கொள்கையும் நேரெதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
தென்னிந்திய தெரு கிரிக்கெட்( SOUTHERN STREET PREMIER LEAGE) வரலாற்றில் முதன் முறையாக டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, 2025-26 சந்தைப் பருவத்திற்கான 14 காரிஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு விலைகளுடன் ஒப்பிடும்போது இந்த MSP உயர்வு, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி மற்றும் அவரது தாய்க்கு தடை விதிக்கக்கோரி ரவி மோகன் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ரவியுடனான திருமண பந்தத்தை முறித்துக் கொள்ள முடிவெடுத்த நிலையில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது இணையதளங்களில் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், மீண்டும் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2,320 உடன், தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,180 சேர்த்து ரூ.3,500 ஆக வழங்கிடுமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று தமிழக சட்டமன்றத்தில் அனைவரும் பேசியது ஆரோக்கியமானது என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி